
சோழர்கள் வரலாறு புறக்கணிப்பு…! -அறம் கிருஷ்ணன்
ஓசூரில் 100 தொழிலாளர்களுடன் இயங்கும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர். அலட்டல் இல்லாத கவிஞர். 'கவிக்கோ' அப்துல் ரஹ்மான், வைரமுத்து, அறிவுமதி ஆகியோரை வைத்து மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் விட அவர் பெருமையும், மன நிறைவும் அடைவது தன்னை ஒரு 'வரலாற்று ஆய்வாளர்' என்று சொல்லிக்கொள்வதில்தான் என்றால் மிகையாகாது. இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர்தான், 'அறம்' கிருஷ்ணன். அவருடனான உரையாடலில் இருந்து...
புதிய அகராதி: உங்கள் பெயரின் முன்னொட்டாக 'அறம்' ஒட்டிக்கொண்டது எப்படி?
அறம் கிருஷ்ணன்: எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் காரணமாக, 'அறம் இலக்கிய அமைப்பு' என்ற அமைப்பை தொடங்கினேன். அதன்மூலம், ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி வருகிறோம். அறம் என்றாலே கொடுப்பதுதானே.
அதனால் விழா நடைபெறு...