மூக்குடைந்த விஜய்; அடித்து ஆடிய உதயநிதி!
சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைத்த அதேநாளில், அரசின் முதல் பணி நியமனமே ரத்து செய்யப்பட்ட விவகாரம், முதல்வர் விஜய்க்கு பக்கா 'நோஸ்கட்' என்கிற விமர்சனமும் கிளம்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் தனித்து வெற்றி பெற்றன.
தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தங்கள் வசமுள்ள 5 எம்எல்ஏக்களுடன் தவெக கூட்டணியில் இணைந்ததோடு, ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியது.
யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆக...









