
நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவருடைய இல்லத்தில், நடிகர் விஜய் இன்று (அக். 15, 2017) திடீரென்று சந்தித்தார்.
விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'மெர்சல்' படம், வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு யு / ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. இருப்பினும், விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
எப்படியும் படத்தை தீபாவளியன்று வெளிக்கொண்டு வந்தால்தான் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும். ஒருபுறம், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும், அவ்வாறு வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டமாகவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு, தியேட்டர் அதிபர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெ...