
ரோசாப்பூ ரவிக்கைக்காரி – நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்!
பழமையில் ஊறிப்போயிருக்கும்
சமூகதளத்தில் புதிய கலாச்சார
மாற்றத்திற்கான வாயில் கதவுகளை
திறந்து வைத்து, பெரும் தாக்கத்தை
ஏற்படுத்திய படம் என்ற பெருமை,
'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'க்கு உண்டு.
1979, மே 18ல் வெளியானது.
தேவராஜ் - மோகன் என்ற
இரட்டை இயக்குநர்களின்
அற்புத படைப்பு. ஏற்கனவே,
அன்னக்கிளியில் வெற்றிக்கொடி
நாட்டியவர்கள்தான். எனினும்,
இவர்களிடம் இருந்து ரோசாப்பூ
ரவிக்கைக்காரி என
உலகப்படங்களின் தரத்தில்,
இன்றளவும் 'கல்ட்' (Cult)
வகைமையிலான படம் வரும்
என்ற எதிர்பார்ப்பு அவ்வளவாக
இல்லாத காலக்கட்டம் அது.
இந்தியா, சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழும் பீரியட் படம்தான் இந்த ரோ.ர. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ரோ.ர. பற்றி ஒரு மீளாய்வாகவே எழுதுகிறேன். சேலம் மாவட்டத்தின் வண்டிச்சோலை எனும் சிறிய மலைக்கிராமம்தான் ரோ.ர.வின் கதைக்களம். மண்ணின் மைந்தனாக இரு...