Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: CBCID police

சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, சந்தேக மரணமாக முடிக்கப்பட்ட வழக்கை, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிசிஐடி காவல்துறை துருவி துருவி விசாரித்து வரும் நிலையில், ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், 'இறந்துபோன நபர் ஒன்றும் விஐவி அல்ல. ஒரு ரவுடி ஃபெல்லோ' என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டி சித்தனூரில் உள்ள காத்தவராயன் கோயில் அருகே வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த சிலர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் தாயின் மடியிலேயே உயிரிழந்தார்.   இதுகுறித்து சகுந்தலா, இரும்பாலை காவல் நிலையத்தில் தன் மகனை கோவிந்தராஜ், ராம்குமார், ஏழுமலை, முட்டை ராஜா என்கிற விஜயராஜா ஆகியோர் அடித்துக் கொன்றுவிட்டத
கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, சந்தேக மரண வழக்கை சரியாக புலனாய்வு செய்யாததால் எட்டு ஆண்டுகள் கழிந்தும் தூக்கம் தொலைத்து நிற்கிறது சேலம் காவல்துறை. சிபிசிஐடி காவல்துறை மீண்டும் சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், இளைஞரின் மரணத்திற்குக் காரணமானவர்கள் முதல் வழக்கை நீர்த்துப் போகச் செய்தவர்கள் வரை பலரும் கிலி அடித்துக் கிடக்கின்றனர்.  சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டி அருகில் உள்ள சித்தனூர் காத்தவராயன் கோயில் அருகில் வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக இருந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு தற்போது 18, 14, 11 வயதுகளில் மூன்று மகன்கள் உள்ளனர்.   கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதியன்று பகல் 11 மணியளவில், அதே ஊரைச் சிலர் மணிகண்டனை
8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
FOLLOW-UP   சங்ககிரியில், எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சட்ட விரோதமாக கிரயம் செய்துகொண்ட பிரபல தொழில் அதிபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.   இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை 'பவர்' பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்தில
கோகுல்ராஜ் கொலை வழக்கு: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் தெரியுமா? தெரியாதா?; சாட்சியிடம் ‘கிடுக்கிப்பிடி! #Gokulraj #Day19

கோகுல்ராஜ் கொலை வழக்கு: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் தெரியுமா? தெரியாதா?; சாட்சியிடம் ‘கிடுக்கிப்பிடி! #Gokulraj #Day19

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் எதிரி பிரபுவை காவல்துறையினர் கைது செய்தபோது குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தார்களா இல்லையா? உங்களுக்கு அந்தச் சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? என்று அரசுத்தரப்பு சாட்சியிடம், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கிடுக்கிப்பிடியாக கேள்விகள் கேட்டதால், சாட்சி குழப்பம் அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். அவருடைய சடலம், மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கைப்பற்றினர்.   கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததால், அவர் சாதி ஆணவ ரீதியில் கொல்லப்பட்டதாக அப்போது பல்வேறு தலித் அமைப
கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதிய தலைமுறை செய்தியாளர் பரபரப்பு சாட்சியம்! #Gokulraj #Day10

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதிய தலைமுறை செய்தியாளர் பரபரப்பு சாட்சியம்! #Gokulraj #Day10

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான புதிய தலைமுறை டிவி செய்தியாளர் நாமக்கல் நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.   தலை துண்டிக்கப்பட்ட நிலையில்... சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதியன்று மாயமானார். மறுநாள் மாலையில் (24.6.2015), நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது.   பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து வந்ததாக கருதப்பட்ட நிலையில்தான் அவருடைய சடலம் கைப்பற்றப்பட்டது. அதனால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.   தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை   இந்த வ
தடம் புரண்டார் சுவாதி…! வழக்கு போட்ட சிபிசிஐடி!! #Day7 #Gokulraj

தடம் புரண்டார் சுவாதி…! வழக்கு போட்ட சிபிசிஐடி!! #Day7 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், அரசுத்தரப்பின் முக்கிய சாட்சியாக கருதப்பட்டு வந்த சுவாதி, திடீரென்று பிறழ் சாட்சியமாக மாறியதால் அதிருப்தி அடைந்த சிபிசிஐடி போலீசார், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அக்டோபர் 1, 2018ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.   பொறியியல் பட்டதாரி   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில், கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ., படிப்பை நிறைவு செய்திருந்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர், கோகுல்ராஜுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்து வந்தார். அதனால் இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. 23.6.2015ம்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது சுவாதியும், கோகுல்ராஜூம்தான் என்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார். இதனால் அரசுத்தரப்பினருக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.   பொறியியல் பட்டதாரி:   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா. கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஏழை கூலித் தொழிலாளியான சித்ராவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், கலைச்செல்வன். இளைய மகன், கோகுல்ராஜ் (23).   திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த கோகுல்ராஜ், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்தார். ஆனாலும், அவ்வப்போது நண்பர்களை பார்க்க கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்படித்தான், 23.6.2015ம் தேதியன்றும் ஓமலூரில் இருந்து கல
கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், ஒரே முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி நேற்று (செப்டம்பர் 10, 2018) நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார். இதை சற்றும் எதிர்பாராத அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்தனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ., பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தனது படிப்பை 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்திருந்தார். தீவிரமாக வேலை தேடி வந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போது வெளியே சென்றாலும் தாய் சித்ராவிடம் சொல்லிவிட்டுச் செல்வதோடு, அன்று மாலைக்குள் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அன்று இந்த நடைமுறைகள் எதையும் கோகுல்ராஜ் பின்பற்றவில்