Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: bus stand

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

நாமக்கல், முக்கிய செய்திகள்
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் என மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து 8.50 கி.மீ. தொலைவில் 1200 பேர் மட்டுமே வசிக்கும் அணைப்பாளையம் என்ற குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு, பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான், ரியல...