Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: bullish

கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  ஓமிக்ரான், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியது, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி, வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது.   கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது, 3.5 சதவீதம் வரை உயர்ந்த
10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த வெள்ளியன்று தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 10607.35 புள்ளிகளில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 6) மேலும் 60 புள்ளிகள் வரை உயர்க்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்திகளும் முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடப்பு வாரத்தில் 10800 முதல் 11000 புள்ளிகள் வரை நிப்டி இண்டெக்ஸ் உயர வாய்ப்புள்ளதாக பங்குத்தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி - 50, தொடர்ச்சியாக மூன்றாவது லாபகரமான வாரத்தை நிறைவு செய்திருந்தது. ஜூலை 3ம் தேதியன்று முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை பீஎஸ்இ மற்றும் எஸ் அன்டு பி சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது. ''பொருளாதார தரவுகளை விட, சந்தைகளின் கள நிலவரங்களின் யதார்த்தங்கள் பெரும
பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், முதல் இரண்டு மணி நேரத்திற்கு கரடி ஆட்டம் காட்டி வந்த நிலையில், இரண்டாவது சுற்றில் காளையின் ஆட்டம் தொடங்கியது. பங்குச்சந்தைகள் ஓரளவு சரிவிலிருந்து மீண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   கரடியின் ஆட்டம்!:   கடந்த வியாழனன்று (ஜூன் 11), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 33538 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை ஆய்வாளர்கள் முன்பே எச்சரித்தது போலவே வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளியன்று (ஜூன் 12), ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 32436 புள்ளிகளில்தான் துவங்கியது. அதாவது முந்தைய நாள் முடிவைக் காட்டிலும் இது 1102 புள்ளிகள் வீழ்ச்சி ஆகும்.   வர்த்தகம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாததால் முதலீட்டாளர்கள் உற்சாகம் இழந்தனர். எனினும், நீண்ட க