Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Bharathi

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…! பாரதி எனும் காதல் மன்னன்!!

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…! பாரதி எனும் காதல் மன்னன்!!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாரதியார்: 11.12.1882 - 11.9.1921   பாரதி என்ற பெயரைக் கேட்டதுமே புரட்சிக்கவி என்ற முன்னொட்டும் மனதில் வந்து அமர்ந்து கொள்ளும். ஆங்கிலேய அடக்குமுறையால் கூன் விழுந்த இந்தியர்களிடையே தன் பாட்டால் சுதந்திரத்தீ மூட்டியவனை அப்படித்தான் பார்க்க முடியும். கவித்திறத்தால் பெண் விடுதலையையும், சுதந்திர வேள்வியையும் வளர்த்தவன். இவை மட்டுமே அவன் முகமன்று. நான் பாரதியின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். அதுதான் அவனுக்குள் இருக்கும் காதல் உணர்வு. சுதந்திர இந்தியா வேண்டும் என்பதும் கூட காதல் உணர்வுதான். ஆனால் கண்ணம்மா மீது அவன் கொண்ட காதல் அளப்பரியது. அவனுக்கு மட்டுமேயானது. 139வது பிறந்த நாளைக் கொண்டாடும் இன்றைய நாளிலும் கூட அவன் எழுதிய காதல் கவிதைகளை அத்தனை எளிதில் கடந்து விட இயலாது.   காதலில் விழுவது பலவீனமானவர்க்கே உரித்தானது என்ற உளவியல் ச
சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ''கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை'' என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார். உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க