Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: attur case

கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூரில், காவல் ஆய்வாளரின் மிரட்டலால் நிதி நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த காக்கி துறைக்கும் அவப்பெயரை உண்டாக்கி இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பில் இந்த வழக்கை கிடப்பில் போட்டதால், நிதி நிறுவன அதிபரை பறிகொடுத்த குடும்பம் கடும் அதிருப்தியில் உள்ளது.   சேலம் மாவட்டம் ஆத்தூர் வினாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார் (49), தன் தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து சொந்த ஊரில் தனலட்சுமி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி, திடீரென்று அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார். என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த மனைவியும், இரு மகன்களும் பிரேம்குமாரை தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் காலையில் (மே 15) சிகிச்சை பலனின்றி பிரேம்குமா