Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: aragazhur venkatesan

உடன்கட்டை ஏறிய தமிழ்ப்பெண்கள்! ‘சதி’ கல் சொல்லும் சேதி!! #Sati #Nadukal

உடன்கட்டை ஏறிய தமிழ்ப்பெண்கள்! ‘சதி’ கல் சொல்லும் சேதி!! #Sati #Nadukal

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
  கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரியும் சிதையில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் நடைமுறை தமிழ்ச்சமூகத்திலும் இருத்திருக்கிறது என்பதற்கான நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன.   உடன்கட்டை என்றாலே நமக்கான அண்மைய வரலாற்றில் அடிபடும் ஒரே பெயர் ராஜாராம் மோகன் ராய்தான். வங்கத்தில் பிறந்த அவர், சதி என்னும் பெண்கள் உடன்கட்டை ஏறும் அவலத்தை அடியோடு ஒழிக்க பெரிதும் பாடுபட்டார். அவருடைய தொடர் முயற்சிகளால், 1833ம் ஆண்டில் அப்போதைய வங்க ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு 'சதி'யை ஒழித்து சட்டம் கொண்டு வந்தார். வங்கம் மட்டுமின்றி ராஜஸ்தானிலும் சதி நடைமுறை அதிகமாக இருந்தது.   உண்மையில் தமிழ்ச்சமூகத்திலும் பரவலாக உடன்கட்டை ஏறும் பழக்கம் இருத்திருக்கிறது. பூதப்பாண்டியனின் ஈமத்தீயில் மனைவி பெருங்கோப்பெண்டு பாய்ந்து இறந்ததாக புறநானூற்றுப்பாடல் (246) ஒன்றில்
திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள், வரலாறு
பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது.   இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலா