“நிஜ வாழ்க்கையில் நடிக்கிறேனா?” – ரஜினிகாந்த் பதில்
‘காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிப்பது கிடையாது’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நாளை (அக். 27, 2017) நடைபெறுகிறது. இதற்காக ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக, இன்று (அக்.26, 2017) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த், எமி ஜாக்சன், ஷங்கர், அக்ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் பதில் அளித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே நடந்த இந்த சந்திப்பில், ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தார் ரஜினி.
‘பொது வாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே..?’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, “நான் சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நடிப்பத...