Tuesday, October 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Anitha

வாயை மூடுங்கள்!: அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்

வாயை மூடுங்கள்!: அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாக அளித்த வாக்குறுதியை அமைச்சர்களால் செயல்படுத்த முடியாததால், அவர்கள் இதுபற்றி ஊடகங்களிடம் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை கூறியுள்ளார். தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, அது தொடர்பான வழக்குகளை விசாரித்தபோதெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாரன், அத்தேர்வுக்கு ஆதரவு வழங்கினார். இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி மற்றும் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா கடந்த 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தமிழகமெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்தது. பல இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளும்கூட ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நீட் தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற...
ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நதிகள் இணைப்புக்காக வீடியோவில் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்னைகளுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை? என்று சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். தமிழக அரசியல் களத்தை ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின் என்று இரண்டு காலக்கட்டங்களாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மக்களிடம் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய எம்ஜிஆர் மறைந்தபோதுகூட, அடுத்தது யார்? என்பதில் நீண்ட குழப்பங்கள் ஏற்படவில்லை. வி.என்.ஜானகியை ஆதரித்தவர்கள்கூட விரைவிலேயே ஜெயலலிதா அணியில் இணைந்து கொண்டனர். இப்போதைய நிலை அப்படி இல்லை. அடுத்து யாரெல்லாம் அரசியல் களத்திற்கு வரலாம் என்ற பட்டியல் போட்டால் அதிலும் சினிமாக்காரர்களே முதல் வரிசையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விஷால், சூர்யா இப்படி நீள்கிறது பட்டியல். 100 படங்களைக் கடந்த முன்னணி...
சபரிமாலா: சாதனையாளர்களை உருவாக்கும் ‘ஒன் உமன் ஆர்மி’

சபரிமாலா: சாதனையாளர்களை உருவாக்கும் ‘ஒன் உமன் ஆர்மி’

அரியலூர், கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, திண்டுக்கல், மதுரை, முக்கிய செய்திகள், விழுப்புரம்
அனிதா மரணம், அதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் கிளர்ச்சி, இவற்றுக்கிடையே ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஒற்றை மனுஷியாக ஈர்த்து இருப்பவர், ஆசிரியை சபரிமாலா. கடந்த சில நாள்கள் முன்பு வரை திண்டிவனம் வைரபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இப்போது நீட் எதிர்ப்புப் போராளி. மட்டுமல்ல. சமத்துவக்கல்விக்கான போராளியும்கூட. ஆசிரியை பணியை ராஜினாமா செய்தவர் என்ற அளவில்தான் அவர் பெயர் வெளியே தெரிகிறது. ஆனால், அதற்கு முன்பே அவர் ஆயிரம் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உள்ளனர். பேச்சாளர். பட்டிமன்ற நடுவரும்கூட. தன் மகனை அரசுப்பள்ளியில் சேர்த்து, செயல்வீரராகவும் இருக்கிறார். இவருடைய கணவர் ஜெயகாந்தன், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதுவுமே கிடையாது. சபரிமாலாவின் பணித்துறப்பின் மீதும் சில எதிர்மறை விமர்சனங்கள் வரவே செய்கின்றன. தனியார் தொலைக்காட்சி ...
நீட் தேர்வு:  பலன் அடைந்தவர்கள் யார்?

நீட் தேர்வு: பலன் அடைந்தவர்கள் யார்?

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வினால் பலன் அடைந்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், முற்பட்ட வகுப்பினர் பெருமளவிலான எம்பிபிஎஸ் இடங்களை கபளீகரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. நீட் எனப்படும் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், ஜெயலலிதாவுக்குப் பிறகு வலுவான அரசியல் தலைவர்கள் இல்லாத நிலையில், இந்தாண்டு தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைந்துவிட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடத்தி முடித்திருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு நீட் தேர்வுக்கு எதிரான உக்கிரம் மாநிலம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டம் பரவலாக வலுத்து வருகிறது. எம்பிபிஎஸ் மாணவ...
நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

கல்வி, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 'மெரீனாவில் ஒன்றுகூடுவோம்' என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோ...
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்!

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்!

அரியலூர், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக ஒரு மாணவர், உயிரை மாய்த்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்-2வில் 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தற்கொலையில் வீழ்வது அனிதா மட்டுமே அல்ல; இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கை (2015). கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 8934 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த அறிக்கை. அதற்கு முந்தை...
நேற்று  செங்கொடி;  இன்று அனிதா!

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

அரசியல், இந்தியா, கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''பொறுத்தது போதும்...புறப்படு தமிழா...'' மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா. அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான். ''அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? 'விமான ஓட்டி' கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,'' என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய ப...