Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: agitation

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

நாமக்கல், முக்கிய செய்திகள்
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் என மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து 8.50 கி.மீ. தொலைவில் 1200 பேர் மட்டுமே வசிக்கும் அணைப்பாளையம் என்ற குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு, பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான், ரியல...
சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!

சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துக்கு இலவசமாக கொடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதால், நூலகத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகே, மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் அசோகா மரம், புளிய மரம், பனை மரம், கொய்யா, மரமல்லி, பாதாம், வாழை மரங்கள் சூழ காற்றோட்டமான சூழ்நிலையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நூலகம் செயல்படுகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கென பிரத்யேக நூல்கள் தருவிக்கப்பட்டது, பெண்களுக்கென தனி வாசிப்புப்பிரிவு என தொடங்கப்பட்டதால் இளைஞர்க...
சபரிமாலாக்களும் அரசு ஊழியர்கள் போராட்டமும்!

சபரிமாலாக்களும் அரசு ஊழியர்கள் போராட்டமும்!

ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக ஆசிரியை சபரிமாலா அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ள அதேநேரத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஊதிய உயர்வுக்காக தொடர் வேலைநிறுத்தம் செய்து வருவதால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வழக்கமாக தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்து போராடுவார்கள். இப்போது ஆளுங்கட்சி உள்ள நிலையில் எப்போது போராடினாலும், அவர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கும், அதன்மூலம் சில பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற உள்ளார்ந்த கணக்கீடுகளும் ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கும் இருக்கலாம். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ - ஜியோவின் பிரதான கோரிக்கை, பணப்பலன்களை பெறுவதே. குறிப்பாக, இப்போது அமலில் உள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வ...