Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Advocate bhavani pa.mohan

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பில் அடுத்தடுத்து விஞ்ஞானப்பூர்வ தடயங்கள் பற்றி, சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ளனர். அதனால் யுவராஜ் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களிடையே நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015, ஜூன் 23ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி மாலை, திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.   இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். குமார் என்கிற சிவக்குமார், சதீஸ் என்கிற சதீஸ்கும
கோகுல்ராஜ் கொலை வழக்கு: குற்றவாளியை தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி!#Gokulraj #Day16

கோகுல்ராஜ் கொலை வழக்கு: குற்றவாளியை தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி!#Gokulraj #Day16

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், குற்றவாளிக்கூண்டில் இருந்த முக்கிய எதிரியை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சியால் சிபிசிஐடி போலீசார் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று ஆணவக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் அவருடைய சடலம், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருண், சங்கர், சதீஸ் என்கிற சதீஸ்குமார், குமார் என்கிற சிவக்குமார் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.   ஆணவக்கொலை போன்ற பரபரப்பான வழக்குகளை ஆறு மாதத்தி