Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ACE Foundation

வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆன பின்பும்கூட இந்தியாவைப் பீடித்திருக்கும் ஏழ்மையின் பிடியில் இருந்து நம்மால் இன்னும் முற்றாக மீள இயலவில்லை. ஆனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்குவதில் ஒவ்வொரு அரசும், முனைப்பு காட்டுகிறதே தவிர, செயலாக்கம் என்று வரும்போது நுட்பமாக பார்க்கத் தவறி விடுகிறது. அதுதான், இந்த நீடித்தத் துயரத்திற்குக் காரணம்.   வறுமையை ஒழிப்பதில் வருவாய் உருவாக்கத்தின் மையக் கருத்தை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே முழுமையாக விளங்கிக் கொண்டார். அவர் காலத்தில் இருந்துதான் ஏழ்மை ஒழிப்புக்கான பணிகள் புது வேகம் எடுக்கத் தொடங்கின. அதாவது, 1980களில். பானர்ஜி என்பவர், 'ஏழைகளின் பொருளாதாரம்' பற்றிய தனது நூலில், வறுமை ஒழிப்பில் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச்னைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது,' என்கிறார். சேலத்தில் செயல்பட்டு வரும் களஞ்சியம்
ஏஸ் பவுண்டேஷன் புலிப்பாய்ச்சல்! கலகலக்கும் தானம் அறக்கட்டளை!!

ஏஸ் பவுண்டேஷன் புலிப்பாய்ச்சல்! கலகலக்கும் தானம் அறக்கட்டளை!!

சேலம், தமிழ்நாடு, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம்
சேலத்தில் கடந்த பிப்ரவரி 9, 2019ம் தேதியில் உதயமானது, 'ஏஸ் பவுண்டேஷன்' (ACE Foundation). இது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பேரமைப்பு எனலாம். இந்த அமைப்பு தொடங்கப்பட்ட பதினைந்து நாள்களில், அடுத்தக்கட்ட நகர்வையும் புலிப்பாய்ச்சலில் முன்னெடுத்துள்ளது. ராமநாதபுரம் மண்டலத்தில், இதுவரை 'தான் பவுண்டேஷன்' (DHAN Foundation) கட்டுப்பாட்டில் இயங்கி வந்த சிகரம், சங்கமம், நெய்தல் (ராமநாதபுரம்), புதுகை (புதுக்கோட்டை) மற்றும் முத்துநகர் (தூத்துக்குடி) ஆகிய ஐந்து வட்டாரக் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், புதன்கிழமையன்று (பிப்ரவரி 20, 2019) ஏஸ் பவுண்டேஷனில் இணைந்து உள்ளன.   இவை வெறுமனே ஐந்து வட்டாரங்கள் என்று குறைத்துச் சொல்லிவிட இயலாது. ஐந்து வட்டாரங்களின் வாயிலாக 20 ஆயிரம் பெண்களை உள்ளடக்கிய, இன்னும் சொல்லப்போனால் அத்தனை பேரின் குடும்பங்களை உள்ளடக்கிய 1500 குழுக்களைக் கொண்டத
52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

சேலம், தமிழ்நாடு, மகளிர், மதுரை, முக்கிய செய்திகள்
சேலத்தில் 52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து 'ஏஸ் பவுண்டேஷன்' (ACE Foundation)என்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் மாபெரும் கூட்டமைப்பை தொடங்கி உள்ளனர். இந்தியா முழுவதும் இயங்கி வரும் அமைப்பு ரீதியற்ற பெண்கள் குழுக்களை ஒருங்கிணைக்கும் முகமாக புதிய பயணத்தை தொடங்கியுள்ளது இந்த மகளிர் படை. இது முற்றிலும் அரசியல் சார்பற்ற அமைப்பு.   தானம் அறக்கட்டளையின் ஓர் அங்கமாக இயங்கி வந்த களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழு, இன்று முதல் (பிப்ரவரி 9, 2019) 'ஏஸ் பவுண்டேஷன்' என்ற புதிய அமைப்பினூடாக தனது பயணத்தை தொடங்கி உள்ளது. அதாவது, தானம் அறக்கட்டளைக்கும் இப்புதிய அமைப்பிற்கும் இனி யாதொரு தொடர்பும் இருக்காது. இப்படியொரு துணிச்சலான முடிவை, சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் இயங்கி வரும் 52 ஆயிரம் பெண்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர். இந்தக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாகத்தி