Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Abdul Kalam

மனித மூலதனக் குறியீடு: இந்தியாவின் நிலை மோசம்!

மனித மூலதனக் குறியீடு: இந்தியாவின் நிலை மோசம்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வல்லரசு கனவை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கர்ஜனை செய்தாலும், மனித மூலதனக் குறியீட்டில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி இருப்பது உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மனித வளத்தைப் பயன்படுத்தும் விதம், மனிதர்களின் உற்பத்திறன் குறித்து உலகப் பொருளாதார மன்றம் (WORLD ECONOMIC FORUM) என்ற அமைப்பு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பு, உலகம் முழுவதும் 130 நாடுகளில் உள்ள மனித மூலதன பயன்பாட்டை ஆய்வு செய்து நேற்று (செப். 13) அறிக்கை (GLOBAL HUMAN CAPITAL  REPORT-2017) வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், இந்தியாவுக்கு 103-வது இடமே கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதென்ன மனித மூலதனம்?: உலகப் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வ தாக்கத்தையும், மதிப்புக் கூட்டும் வல்லமையையும் மக்களுக்கு அளிக்கும் அறிவும், திறமையுமே மனித மூலதனம் என்று அந்த அமைப்...
‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதித்து விட்டாரா இல்லையா? என்று இன்னும் காட்சி ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கேற்ப அவரும், 'இன்னும் சமையல் வேலை முடியவில்லை' என்பார்; அல்லது, 'ஓட்டுப் போடும்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன்' என்பார். இப்படி பூடகமாக பேசுவதும், 'ட்வீட்' போடுவதிலும் கமல் பி.ஹெச்டி., முடித்தவர்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 3) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு கமலின் அரசியல் என்ட்ரி உறுதியானது பற்றி தெளிவாக புரிந்திருக்கும். அவர் நடிகர் சக்தியிடம் பேசுகையில், ''இனிமேல் நான் அரசியல்வாதிகளை நக்கல் செய்ய முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,'' என்பார். இப்படி குறியீடுகள் வாயிலாக பேசுவது கமலுக்கே உரித்தானது. அவருடைய பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி, அரசியல் நுழைவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகி...