Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வேலைவாய்ப்பு

பிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்?: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர் #1

பிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்?: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர் #1

இந்தியா, கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2க்குப் பிறகு பட்டமேற்படிப்பில் எதை தேர்வு செய்வது? என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கான குறுந்தொடர் இது. கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் பாடங்களைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்து இந்த தொடரில் பார்க்கலாம். பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கும் மிகப்பெரும் இடைவெளி ஏற்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது. பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பில் பி.காம்., பி.பி.எம்., பி.பி.ஏ., அல்லது பி.ஏ., பொருளாதாரம், கூட்டுறவு, வரலாறு இப்படி தெரிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். நானும் நண்பர் ஒருவரும் சில மாதங்களுக்கு முன்பு, ஈழ அகதி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்குவது தொடர்பான தகவல் சேகரிப்புக்குச் சென்றிரு ந்த
177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு;  தவறை உணர்ந்த பாஜக!

177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு; தவறை உணர்ந்த பாஜக!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய அரசு 177 பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை இன்று (நவம்பர் 10, 2017) அதிரடியாக குறைத்துள்ளது. இதன்மூலம், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய தவறுகளை பாஜக ஒப்புக்கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே இந்தியா ஒரே வரி என்ற பாஜகவின் கொள்கையாக இந்த புதிய வரி சீர்திருத்தம் கருதப்படுகிறது. இதன்படி 0, 5, 12, 18, 28 என ஐந்து படிநிலைகளில் ஜிஎஸ்டி வரிகள் நிர்ணயிக்கப்பட்டன. அத்தியாவசியமான பொருள்களில் பலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், முக்கியமான பல பொருள்களுக்கும், சேவைகளுக்கும் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டு இருப்பதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போன்றோர், மாநிலங்களில் மதிப்புக்கூடுதல் வரிகள் அமலில் இருக்கும்போது
நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதுகூட இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலையாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார சரிவை மட்டுமல்ல, உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்து, கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தடுமாறிக் கொண்டிருக்கிறது. அச்சா தின்: கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 'நான் பிரதமரானால் இந்தியாவுக்கு 'அச்சா தின்' (நல்ல நாள்) பிறந்து விடும்' என்றார். ஜன்தன், ஆதார், மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு, புல்லட் ரயில், சவுபாக்கியா என ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி அகன்ற மார்பை திறந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கும், அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் வேண்டுமானால் அந்த நாள்கள், நல்ல நாள்களாக இருக்கல