Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வீரப்பன்

சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

ஈரோடு, சேலம், தமிழ்நாடு
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், மே 25ம் தேதி, புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். 78 வயதான மாதையன், நீண்ட காலமாக சிறைக் கொட்டடியில் இருந்தே உயிர் விட்டிருக்கிறார். அவருடைய மரணம், தமிழக சிறைச்சாலைகள் வயதான கைதிகளின் வதை முகாம்களாக மாறி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனச்சரகர் சிதம்பரம் என்கிற சிதம்பரநாதன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். 1987ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரம்பத்தில், சிதம்பரம் கொலை வழக்கில் மாதையன் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 1996ம் ஆண்டு அவருக்கு
வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில அரசுகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு அக்.18ம் தேதி காவல்துறை அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டை முடிந்து கடந்த 2017, 18ம் தேதியுடன் 13 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை, 'பட்டுக்கூடு ஆபரேஷன்' (Operation Cocoon) மூலம் வேட்டையாடிய அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார், 'வீரப்பன் - சேசிங் தி ப்ரிகாண்ட்' (Veerappan - Chasing the Brigand) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் வீரப்பன் ஏன் வேட்டையாடப்பட்டார், கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார், அமைச்சர் நாகப்பா ஆகியோரை வீரப்பன் கடத்தியது ஏன் என்பது குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்.   காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட கே.விஜயகுமார், நடுவண் பாதுகா