Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வருமானவரித்துறை

20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

சிறப்பு கட்டுரைகள், நாமக்கல், முக்கிய செய்திகள்
வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்களும், சவால்களும்தான் உலகுக்கு நிஜ நாயகர்களை அடையாளம் காட்டுகின்றன. அப்படி, ஒரு காலத்தில் பண்ணை அடிமையாக இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய கிராம மக்களுக்கு தேடித்தேடிச் சென்று 20 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகளை இலவசமாக வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.   நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (49). மனைவி தமிழ்ச்செல்வி. மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 1வது ரிசர்வ் வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி. அதற்கு முன்பு, அவினாசிப்பட்டி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடிதான் உத்தரவிட்டார் என்று சேலத்தில் திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.     எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஜூலை 20, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது:   எட்டு வழிச்சாலைத் திட்டம் அமையவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அப்படியிருந்தும், அரசு இந்த சாலைத் திட்டத்திற்காக துணிச்சலாக நிலங்களை கையகப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இந்த சாலைத் திட்டத்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?     முதலில் கிராமச்சாலைகளை மாநில நெடுஞ்சாலைக
அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-பிந்துசாரன், சமூக செயற்பாட்டாளர்-   1950 -ம் ஆண்டு சனவரி 26ம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் எனத் தெரிவிக்கின்றது.   இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் எனவும், பிறகு 1965ம் ஆண்டு முதல் ஆங்கிலம் ஆட்சிமொழி என்னும் நிலையை தானாக இழக்கும் எனவும் அறிவிக்கின்றது. இந்திய ஒன்றிய அரசின் இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து, தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி காக்கும் போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிர் ஈந்தனர்.   அதன் விளைவாக அலுவல் மொழிச்சட்டத்தில், இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீட்டிக்கப்படும் எனத்திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இந்திய ஒன்றியத்தில் இருந்து, இந்தி மொழி அல்லாத பிறம