Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

-பிந்துசாரன், சமூக செயற்பாட்டாளர்-

 

1950 -ம் ஆண்டு சனவரி 26ம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் எனத் தெரிவிக்கின்றது.

 

இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் எனவும், பிறகு 1965ம் ஆண்டு முதல் ஆங்கிலம் ஆட்சிமொழி என்னும் நிலையை தானாக இழக்கும் எனவும் அறிவிக்கின்றது.

பிந்துசாரன் இந்து எதிர்ப்பு போராட்டத்தின்போது…

இந்திய ஒன்றிய அரசின் இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து, தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி காக்கும் போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிர் ஈந்தனர்.

 

அதன் விளைவாக அலுவல் மொழிச்சட்டத்தில், இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீட்டிக்கப்படும் எனத்திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இந்திய ஒன்றியத்தில் இருந்து, இந்தி மொழி அல்லாத பிறமொழிகளைக் காக்கும் வகையில் தமிழ்நாட்டின் போராட்டம் அமைந்தது.

 

இந்திய ஒன்றியத்தின் அலுவல்
மொழிகளான இந்தியும், ஆங்கிலமும்
நடைமுறைப்படுத்த, இந்திய ஒன்றிய
பயன்பாட்டுக்கான அலுவல்
மொழிகளின் சட்டத்தில்,
1976ம் ஆண்டு விதிகள்
உருவாக்கப்பட்டன.

 

இதில் தொடக்கத்திலேயே
பிரிவு-1ல் காணும் சட்டவிதி,
“தமிழ்நாட்டைத் தவிர இந்தியா
முழுமைக்கும் (அலுவல்
மொழிகளான இந்தியும் ஆங்கிலமும்)
நீட்டிக்கப்படுகின்றது”. மேலும்
பிரிவு-4 (2) (இ)-ல், பகுதி ‘சி’-ல்
(குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களில்)
கொடுக்கப்படும் அறிவிப்புகள்
யாவும் அந்தந்த மாநில
மொழிகளிலேயே கொடுக்கப்பட
வேண்டும் என்பதைக் கட்டாயக்
கடமையாக வலியுறுத்துகின்றது.

பிந்துசாரன்

ஆக, இந்திய ஒன்றிய அரசுத்துறை
அலுவலகங்கள், ஆணையங்கள்,
நிறுவனங்கள் ஆகியவற்றில்
இந்தியா முழுவதும்
நடைமுறைப்படுத்தும்போது
அலுவல் மொழிகளின் சட்ட
விதிகள்யாவும் தமிழ்நாட்டிற்குப்
பொருந்தாது எனவும், மேற்கண்ட
சட்ட விதிகளின்படி தமிழ்நாட்டில்
உள்ள இந்திய ஒன்றிய
அலுவலகங்களில் தமிழ்மொழிதான்
அலுவல் மொழியாக இருக்க
வேண்டும் எனவும் மிகத்
தெளிவாக சட்டங்கள்
கூறுகின்றன.

 

ஆனால் இந்தச் சட்டத்திற்கு முரணாக தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய ஒன்றிய அலுவலகங்கள் யாவும் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றை மட்டுமே அலுவல் மொழியாகச் செயல்படுத்தி வருகின்றது.

 

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களின் வாடிக்கையாளர், பயனாளர், அலுவலர் ஆகிய பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க, தமிழ் மக்களிடமும் அலுவலக ஆவணங்கள், கோப்புகள் உள்ளிட்ட உள்ளகத்தொடர்புகளும் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் மட்டும் இருக்கின்றன.

இவை யாவும் அலுவல் மொழிகளின் சட்டப்படி தமிழ்நாட்டில் தாய்மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். அவ்வாறு தமிழ் இல்லாதிருப்பது சனநாயகத்திற்கும் சட்ட விதிகளுக்கும் எதிரானது.

 

 

இந்தியில் கையொப்பம் போடவும், தட்டச்சு செய்யவும் இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்களிடம் செயல்படுத்த எழுத்துப்பூர்வமாகவே பல உத்தரவுகள் இடப்படுகின்றன. இத்தகைய செயல் அப்பட்டமான சட்ட விதி மீறலாகும்.

 

இதை, அலுவல்மொழியை
அமல்படுத்தும் துறையும், குழுவும்
(Official Language Implementation
Department and Committee)
வெளிப்படையாகவே 1963, 1976
ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட
சட்டங்களை மதிக்காமலும், மறுத்தும்
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை
அலுவல்மொழி ஆக்காமல் இந்தியை
மட்டும் நடைமுறைப்படுத்துவது
கண்டிக்கத்தக்கதாகும்.

 

தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ள காலி இடங்களுக்கு இந்தி படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தோருக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.

ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழ்நாட்டில் உள்ள காலி இடங்களுக்காக வட இந்தியாவில் அறிவிக்கப்பட்டு, இந்தியில் மட்டும் தேர்வுகள் நடத்தி, வட இந்தியரை அமர்த்தும் நிலையைக் கடந்த, நிகழ்காலங்களில் பார்க்கின்றோம்.

 

எடுத்துக்காட்டாக, 2007-2014 வரையில்
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே துறை,
வருமானவரித்துறை, உற்பத்தித்துறை,
திருச்சி மிகுமின் நிறுவனம்,
படைத்துறைகளில் உயர் அதிகாரிகள்
பொறுப்புள்ள பதவிகளில் 80
விழுக்காட்டிற்கு மேல்,
வெளிமாநிலத்தவர்களே சேர்க்கப்பட்டு
உள்ளனர்.

 

இதனால் தமிழ்நாட்டில் உள்ள
இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய
வேலைவாய்ப்புகளைப் பறித்து,
அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை
பாழடிக்கப்படுகின்றது.

 

சென்ற தலைமுறையினர்

போராடி உயிர்கொடுத்து

தமிழ் மொழிக்கான

உரிமையைப் பெற்றுத் தந்தனர்.

ஆனால், நாம் அதை சற்றும்

நினைவில் கொள்ளாமலும்

சட்ட விதிகளைத் தெரிந்து

கொள்ளாமலும் பெற்ற

உரிமையை இழந்துவிட்டோம்.

 

தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கின்றது.

 

கட்டுரையாளரிடம் பேச: 98941 88055.

( “புதிய அகராதி” விளம்பர தொடர்புக்கு: 98409 61947).