Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வரி குறைப்பு

49 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

49 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 25வது அமர்வு டெல்லியில் இன்று (ஜனவரி 18, 2018) நடந்தது. மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த கவுன்சில் கூட்டத்தில் 29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விபூதி, சர்க்கரை மிட்டாய், 20 லிட்டர் கேன் குடிநீர் உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது. பொழுது போக்கு பூங்கா கட்டணம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி குறைப்பு. ஜனவரி-25 தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும்  10 நாட்களுக்கு பிறகு ஜி.
ஜிஎஸ்டி வரி குறைப்பு: ‘மீம்ஸ்’களால் வறுபடும் பாஜக!

ஜிஎஸ்டி வரி குறைப்பு: ‘மீம்ஸ்’களால் வறுபடும் பாஜக!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜிஎஸ்டி வரி குறைப்பை (சரக்கு மற்றும் சேவை வரி) வரவேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு வழக்கம்போல் ட்விட்டரில் மீம் கிரியேட்டர்கள் அவர்களை நிமிரவே விடாமல் குனிய வைத்து குமுறியிருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டின் பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில் ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே வரி சித்தாந்தங்களை முன்னெடுத்து வருகிறது. சங்க பரிவாரங்களின் அஜன்டாவை அமல்படுத்துவதில் குறியாக செயல்படுகிறது. அதற்கேற்ப, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு முறையை நடுவண் அரசு அமல்படுத்தியது. 18 ஆண்டுகளுக்கு மேலாக விவாதத்தில் இருந்த இந்த வரி விதிப்பு முறை, பாஜக அரசு அமல்படுத்தியிருக்கிறது. ஜிஎஸ்டி முறையை காங்கிரஸ் வரவேற்றாலும், அதை அமல்படுத்தியதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், 28