Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ரவுடி

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்;  கட்டப்பஞ்சாயத்து  ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்; கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாக 20 பேர் புதிதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் புகார்கள் அளித்துள்ளனர். மேலும், உதவி பேராசிரியர் சுரேஷை கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் பணம் கேட்டு கடுமையாக மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தராக பணியாற்றி வந்த கணபதியை, கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நியமனம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கணபதிக்கு தரகு வேலை பார்த்ததாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றொரு பேராசிரியர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரு
ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி