Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மல்லசமுத்திரம்

திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!

திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!

நாமக்கல், முக்கிய செய்திகள்
திருச்செங்கோடு அருகே, பொது வெளியில் மது அருந்திய பட்டியல் சமூக இளைஞர்களை உள்ளூரைச் சேர்ந்த கவுண்டர் சமூக ஆள்கள் தட்டிக் கேட்டபோது, அவர்கள் எழுந்து நின்று பதில் சொல்லாததால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பட்டியல் சமூக வாலிபரின் காது ஜவ்வு கிழிந்தது.   நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டியைச் சேர்ந்த செங்கோடன் மகன் வெற்றிவேல் (32). ரிக் லாரி ஓட்டுநர். இதே ஊரைச் சேர்ந்த சின்னுசாமி மகன் ராஜமாணிக்கம் (40). அவினாசிப்பட்டி ஊராட்சிமன்றத் துணைத்தலைவர். இருவரும் உறவினர்கள். கடந்த 4ம் தேதி இரவு, அவினாசிப்பட்டிக்கு பக்கத்து ஊரான வண்டிநத்தம் சின்ன ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றபோது செயின் ரிப்பேர் ஆனதால் அதை சரி செய்து கொண்டிருந
மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

நாமக்கல், முக்கிய செய்திகள்
மல்லசமுத்திரம் அருகே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரை, அவருடைய முன்னாள்  ஊழியர் உள்பட 7 பேர் காரில்  விரட்டிச்சென்று அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (50). திமுக பிரமுகர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர், மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு திமுக கவுன்சிலராக உள்ளார்.   முருகேசன், சொந்த ஊரில் பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். மேலும், தனியார் நிறுவனங்களுக்கு தேவையான வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்தத்தின்பேரில் பணிக்கு அமர்த்தும் மேன்பவர் கன்சல்டசன்சி நிறுவனமும் நடத்தி வருகிறார்.   இவரிடம், மோர்பாளையம் அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர், கார் ஓட்டுநராகவும், மேலாளராகவும் 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்த
20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

சிறப்பு கட்டுரைகள், நாமக்கல், முக்கிய செய்திகள்
வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்களும், சவால்களும்தான் உலகுக்கு நிஜ நாயகர்களை அடையாளம் காட்டுகின்றன. அப்படி, ஒரு காலத்தில் பண்ணை அடிமையாக இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய கிராம மக்களுக்கு தேடித்தேடிச் சென்று 20 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகளை இலவசமாக வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.   நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (49). மனைவி தமிழ்ச்செல்வி. மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 1வது ரிசர்வ் வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி. அதற்கு முன்பு, அவினாசிப்பட்டி