Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மலக்குழி

நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சந்திரயான் விண்கலம் நிலவில் கால் பதித்ததை கொண்டாடும் அதே இந்திய ஒன்றியத்தில்தான், இன்னும் மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி விடப்படும் அவலங்களும் தொடர்கின்றன என்ற கூக்குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.   இந்தியாவில், நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 50 பேர் விஷ வாயு தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், குஜராத், மஹராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த உயிர்பலிகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் (National Commission of Safai Karamcharis - NCSK). உண்மையில், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.   ஏனெனில், கழிவுந
நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? சாதிய ஒடுக்குமுறையை துகிலுரியும் பரியேறும் பெருமாள்! #PariyerumPerumal

நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? சாதிய ஒடுக்குமுறையை துகிலுரியும் பரியேறும் பெருமாள்! #PariyerumPerumal

சினிமா, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமாக்களில் இதுநாள் வரை ஆகிவந்த காட்சி மொழியையும், நாயகத்தனத்தை தூக்கிப்பிடித்தலையும் சுக்கல் சுக்கலாக்கி, புதிய தடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது, பரியேறும் பெருமாள். தமிழ் ரசிகனின் ரசனையையும் பல படிகள் உயர்த்தி இருக்கிறது. இனி, பரியேறும் பெருமாளுக்கு முன், பரியேறும் பெருமாளுக்குப் பின் என்று தமிழ் சினிமாக்களை காலவரிசைப்படுத்தலாம்.   மய்யக் கதாபாத்திரம்   நம்முடன் தெரு முனை கடையில் தேநீர் அருந்தும் சராசரி இளைஞனைத்தான் கதிர் பிரதிபலிக்கிறார். அவர்தான் பரியேறும் பெருமாள். கதை நாயகன். மய்யக் கதாபாத்திரம் அவருக்கானது என்றாலும், படத்தில் வரும் வேறு சில துணை பாத்திரங்களே இந்தக் கதைக்கு அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றன.   இரண்டே காட்சியில் வந்தாலும் திரை பார்வையாளர்களை அச்சச்சோ... அவரை விட்டுடுங்கடா என சொல்ல வைத்திருக்கும் பர