Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மனித உரிமை மீறல்

சேலம் போலீசின் காட்டு அடியில் முதியவருக்கு எலும்பு முறிவு; மகனுக்கு பார்வை நரம்பு பாதிப்பு! காக்கிகளின் தொடரும் அராஜகம்!!

சேலம் போலீசின் காட்டு அடியில் முதியவருக்கு எலும்பு முறிவு; மகனுக்கு பார்வை நரம்பு பாதிப்பு! காக்கிகளின் தொடரும் அராஜகம்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், விசாரணை என்ற பெயரில் வரவழைத்து 83 வயது முதியவர் என்றும் பாராமல் லட்டியால் மிருகத்தனமாக தாக்கியதில் முதியவருக்கு கை எலும்பு முறிந்தது. அவருடைய மகனுக்கு கண் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன.   சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக கந்தசாமி குடும்பத்தினரின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது. இவர்கள் இருவரின் நிலத்திற்கு இடையே கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து தொடங்கி ஆத்துக்காடு பகுதி வரை நீண்டு செல்லும் ஓடை ஒன்று உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெருமாள், க
நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா, கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
ராஜஸ்தானில் செயல்படும் தனியார் கோச்சிங் செண்டர்களும், சிபிஎஸ்இ நிர்வாகமும் சேர்ந்து கொண்டு நீட் தேர்வில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகீர் புகார் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: மனித உரிமை மீறல்: நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. தேர்வு எழுதும் மாணவிகளின் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, பூவை பறிக்கும் கொடூர செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகளைக்கூட கழற்றி சோதனையிட்டுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து தே