Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மண் கண்டம்

சேலம்: ஆர்கானிக் மாம்பழம், சப்போட்டா உற்பத்தியில் அசத்தும் ஷாஜஹான்!; தித்திக்கும் சுவையால் பெருகும் வாடிக்கையாளர்கள்

சேலம்: ஆர்கானிக் மாம்பழம், சப்போட்டா உற்பத்தியில் அசத்தும் ஷாஜஹான்!; தித்திக்கும் சுவையால் பெருகும் வாடிக்கையாளர்கள்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக் கட்டுரை-   முறையான பயிற்சியும், முடியும் என்ற நேர்மறையான சிந்தனையும் இருந்தால் இயற்கை வேளாண்மையில் உறுதியாக சாதிக்க முடியும் என்கிறார் சேலம் ஷாஜஹான். சேலம் கோட்டையைச் சேர்ந்த ஷாஜஹான் (62), எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறார். விவசாயப் பின்னணி ஏதுமில்லை. பல்வேறு சுயதொழில்களைச் செய்து வந்தவர் கடைசியாக, ஆடியோ தொழில் செய்து வந்தார். அந்த தொழில் நன்றாக வளர்ந்த நிலையில், தன் நண்பர்களிடம் விட்டுவிட்டு முழுநேர விவசாயத்திற்கு மாறினார்.   சேலம் மாவட்டம் அடிமலைப்பட்டி கிராமத்தில் போதமலை அடிவாரத்தில் அமைத்திருக்கிறது அவருடைய மாந்தோப்பும் சப்போட்டா தோப்பும். பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அதுவும் வெற்றிகரமாக.   முழுக்க முழுக்க இயற்கையை நேசிக்கும் மனிதராக தென்பட்டார். அவர் பேச்சிலும், நீண்ட நேர உரையாடலிலும