Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மக்கள் நீதி மய்யம்

நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு, பொன்ராஜ் ஆகியோரை தொடர்ந்து சேலம் மேற்கில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நோய்த்தொற்று கிலியால் வேட்பாளர்கள் கூட்டங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.   தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், தலைவர்களின் உச்சக்கட்ட பரப்புரைகளால் அனல் பறந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கொரோனா இரண்டாவது அலை இம்முறை அரசியல் கட்சியினர் மீது அடுத்தடுத்து தாக்குதலை தொடர்ந்து வருவது, வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.   ஏற்கனவே, சென்னை வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கொரோனா தொற்றுக்கு ஆளானார். மக்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுவதாகவும் அ
கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

அரசியல், தமிழ்நாடு, திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள்
'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரம் அது. டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, அனிதா மரணம் குறித்து கமல்ஹாஸன் ட்விட்டர் பக்கங்களில் ஆளுங்கட்சியை காட்டமாக விமர்சிக்க, பதிலுக்கு ஆளும் தரப்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டது. ''ட்விட்டரில் மட்டும் அரசியல் செய்தால் போதாது. துணிச்சல் இருந்தால் களத்திற்கு வரட்டும்'' என அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் கமல்ஹாஸனை சீண்டிக்கொண்டே இருந்தனர். நேற்றைய தினம், கமல்ஹாஸன் புதிய கட்சியை தொடங்கி, எல்லோரையும் அதிரடித்துவிட்டார். நேற்றைய தினம் கமல்ஹாஸன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்றே சொல்லலாம். காலை 7.45 மணிக்கு துவங்கிய பயணம் இரவு 10 மணிக்குதான் முடிந்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடு, அவருடைய நினைவிடம், சொந்த ஊரான பரமக்குடி விஜயம், பிறகு மதுரை மாநாடு என புயலாகச் சுழன்றடித்துள்ளார். கமல், சினிமாவில் உ
மக்கள் நீதி மய்யம்: கமல் புதிய கட்சி துவங்கினார்

மக்கள் நீதி மய்யம்: கமல் புதிய கட்சி துவங்கினார்

அரசியல், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று (பிப்ரவரி 21, 2018) துவங்கினார். மதுரையில் நடந்த முதல் மாநாட்டில் கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகச் சொல்லி வந்தார். கடந்த சில மாதங்களாகவே கட்சியின் பெயர், கொள்கை குறிப்புகள் வகுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கினார். இன்று இரவு மதுரை ஒத்தக்கடையில் நடந்த மாநாட்டில், தனது புதிய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில் அவர் கட்சி தொடங்கியுள்ளார். மாநாட்டு மேடையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் சிறப்பு விருந்தினராக மேடையேறினார். அவர், கமலின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துச் சொல்லி,