Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பெரியார்

தமிழகம்: அணையா நெருப்பு!:  ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

தமிழகம்: அணையா நெருப்பு!: ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு, காவிரி விவகாரத்தில் பாஜகவின் அநீதிக்கு எதிராகவும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.     இந்திய அளவில் மிகப்பெரும் போராட்டக் களமாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈழ இறுதி யுத்த நாள்களில் தொடங்கிய போராட்டம் வெப்பம் குறையாமல் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள், கூடங்குளம், டாஸ்மாக், நெடுவாசல், விவசாயிகள் தற்கொலை, நியூட்ரினோ, காவிரி என அடுத்தடுத்து உஷ்ணம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.   இதற்கான பொறி, கண்ணகி விதைத்தது. செங்கோல் முறைமையில் இருந்து வழுவிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு அணையாமல் தணலாக விசும்பிக் கொண்டே இருக்கிறது.   எங்கெல்லாம் எப்போதெல்லாம் நீதி வழுவுகிறதோ அப்போதெல்லாம் தணல் கனிந்து பெரும் ஜூவா
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?;  காவலர்  போட்டித்தேர்வில் கேள்வி

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?; காவலர் போட்டித்தேர்வில் கேள்வி

ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இரண்டாம்நிலைக் காவலர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வில், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகக் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள 6140 இரண்டாம் நிலைக்காவலர் அந்தஸ்திலான பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11, 2018) நடந்தது. 232 மையங்களில் சுமார் 3 லட்சம் பேர் தேர்வெழுதினர். இத்தேர்வு மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. பொது அறிவு பகுதியில் இருந்து 50 வினாக்களும், உளவியல் பிரிவில் இருந்து 30 வினாக்களும் கேட்கப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். அவர்களுக்கு உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். எழுத்துத்தேர்வுக்கான கால வர
எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

அரசியல், ஈரோடு, கடலூர், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்ற ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் தீக்கனலாய் பரவி வரும் நிலையில், அவரும் பாஜகவினரும் பெரியார் தன் மீதான எதிர்ப்புகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டு, நெஞ்சுரத்துடன் களமாடினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ அமைப்பே பாராட்டிய ஒப்பற்ற சமூகப் போராளியான பெரியாரின் ஒட்டுமொத்த பயணமும் திராவிடர்களுக்கானது; தமிழர்களுக்கானது. அவருடைய பயணத்தில் அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகளும், அவற்றை எதிர்கொண்ட விதமும் பற்றிய சில பதிவுகள் இங்கே... திராவிடர் கழகத்தினர், சேலத்தில் 1971ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினர். அந்த மாநாட்டையொட்டி ஓர் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில், திராவிடர் கழகத்தினர் ஹிந்து மத கடவுளர்களை அவமதித்ததாகக் கூறி, அவருடைய எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்தும், செருப்பால் அடித
பெரியார் விவகாரம்: நேற்று இலை… இன்று சிலை… நாளை தலை…!

பெரியார் விவகாரம்: நேற்று இலை… இன்று சிலை… நாளை தலை…!

அரசியல், ஈரோடு, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வேலூர்
தோழர் பெரியார், புரட்சியாளர் லெனின் சிலைகள் கம்பீரமாய் வெட்டவெளியில் நிற்கின்றன. கடவுளர்கள் அச்சத்துடன் கருவறைக்குள் ஒடுங்கிப்போய் கிடக்கின்றனர். அதை வசதியாக மறந்துவிட்டு, ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துகளால் தமிழ்நாடே இன்று கொந்தளித்துக் கிடக்கிறது. பெரியார் சிலையை உடைப்போம் என்று கொக்கரிக்கும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. பாசிஸ சித்தாந்தங்களில் திளைத்த ஜெயலலிதாகூட தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பெரியாரை சீண்டிவிடாமல் கவனமாகக் கடந்து சென்றார். ஆனால், தமிழக தேர்தல் களத்தில் நோட்டாவைக் கூட வீழ்த்த முடியாத பாஜக, தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும் கொக்கரித்து வருவது அனைத்து தரப்பிலும் கடும் அதிருப்திகளை உருவாக்கி வருகின்றன. திரிபுராவில் ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அங்
சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ''கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை'' என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார். உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க