Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: புதிய பாடத்திட்டம்

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பாடப்புத்தகத்தின் துணையின்றி தானாகவே சிந்தித்து எழுதும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தது, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) பிளஸ்-2 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தலைமையில் புதிய பாடங்களை எழுதுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மெதுவாக கற்கும் மாணவர்கள் முதல் அதிபுத்திசாலி மாணவர்கள் வரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்றபடி புதிய பாடங்களை வடிவமைத்தது.   இந்த மாற்றமானது, மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள் வடிவமைப்பிலும் எதிரொலித்தது. அதாவது, எல்லா வினாக்களுக்கும் பாடப்புத்தகத்தின் துணை கொண்டு விடை அளிக்க வேண்டிய தேவை இருக