Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பல்கலை மானியக்குழு

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
  ஆசிரியர் பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பட்டியல் போட்டு வசூல் வேட்டை நடத்திய பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், வழக்கில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிட்ட முன்னாள் அமைச்சர்களிடம் தஞ்சம் அடைந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலத்தை அடுத்த கருப்பூரில், கடந்த 24 ஆண்டுகளாக பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலையுடன், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன.   இப்பல்கலையின் துணைவேந்தராக கடந்த 2014 முதல் 2017 வரை சுவாமிநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். ஆராய்ச்சியாளர்களையும், பெரும் கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம், அவருடைய பணிக்காலத்தில்தான் ஊழல் வேட்டைக்களமாக மாறிப்போனதாக கூறுகிறார்கள்
பெரியார் பல்கலை: பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது சிண்டிகேட் குழு! #PeriyarUniversity

பெரியார் பல்கலை: பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது சிண்டிகேட் குழு! #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு, தகுதியற்றவர்களுக்கு பதவி உயர்வு, பல கோடி ரூபாய்க்கு தணிக்கை தடைகள் என பல்வேறு சர்ச்சைகள், பரபரப்புகளுக்கு நடுவே பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (செப். 29, 2018) கூடுகிறது சிண்டிகேட் குழு. அலிபாபா குகை   சேலம் பெரியார் பல்கலை தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நியமனங்களில் அரசியல் தலையீடு இருந்து வருகிறது. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் காலத்தில், கல்விக்கூடமான பெரியார் பல்கலை கிட்டத்தட்ட அலிபாபா குகைபோல் பரிணாம வளர்ச்சி அடைந்தது எனலாம்.   காரணம், அவர் பதவி வகித்தபோது ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலித்துக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினார். அதுகுறித்த புகார்கள் மீது தமிழக உயர்கல்வித்துறையும், ஊழல் தடுப்புத்துறையும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்குள் பலருடைய ஆயுளும் முடிந்துவிடும். &
பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் உடல்பருமனால் அவதிப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வளாகத்திலும் இனி நொறுக்குத்தீனிகள் (Junk Food) விற்கக்கூடாது என்று பல்கலை மானியக்குழு (யுஜிசி) அதிரடியாக தடை விதித்து உள்ளது.   இந்தியா எதிர்கொண்டுள்ள உடல்நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகளுள் ஒன்று, உடல்பருமன் (Obesity). 1975ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு உடல்பருமன் பிரச்னை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு நிலவரப்படி 30 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல்பருமனால் அவதிப்படுவதாக கூறுகிறது ஓர் ஆய்வு. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2025ல் இப்பிரச்னைக்கு 70 மில்லியன் பேர் இலக்காகக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த மருத்துவ ஆய்வு. பாட்டிக்கு இருந்த அதே பிரச்னை பேத்திக்கும் இருக்கலாம். அந்த வகையில் இது
போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
-சிறப்பு செய்தி-   சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.   பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.   தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.   அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப