Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நிதியுதவி.

விபத்தில் பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை!

விபத்தில் பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை!

கல்வி, தகவல்
விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.   பொருளாதார வசதியின்றி ஒரு குழந்தை படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், முழுமையான பள்ளிக்கல்வியை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில், தமிழக அரசு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உச்சபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நீண்ட காலமாக செயல்படுத்தி வருகிறது.   இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:   கேள்வி: 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க என்னென்ன தகுதிகள்?   பதில்: வருவாய் ஈட்டி வந்த தந்தை அல்லது தாய் ஆகியோரில் ஒருவரோ அல்லது இருவருமோ விபத்தில் உயிரிழந்து இருந்தாலோ அல்லது அவர்களால் இனி
தமிழரின் அறுவை சிகிச்சைக்கு 11 லட்சம் வசூலித்து கொடுத்த கேரள மக்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்

தமிழரின் அறுவை சிகிச்சைக்கு 11 லட்சம் வசூலித்து கொடுத்த கேரள மக்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்

இந்தியா, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்தபோது மனிதம் செத்துவிட்டதாக கேரள மக்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், அதே கேரள மக்கள் இன்னொரு தமிழரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.11 லட்சம் வசூலித்துக் கொடுத்து மனிதத்தை மீட்டெடுத்துள்ளனர். நெகிழ்ச்சியான நிகழ்வின் பின்னணி இதுதான்... மதுரையைச் சேர்ந்தவர் ஜெயன். இவருடைய மனைவி மாரியம்மாள். குடும்பத்துடன் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் சிங்காவனம் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவர் கேரளாவில் குடியேறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜெயன், இஸ்திரி (அயனிங்) கடை வைத்திருக்கிறார். சிங்காவனம் மற்றும் பல்லம் கிராம மக்கள் தங்கள் உடைகளை ஜெயனிடம் கொடுத்துதான் இஸ்திரி செய்து வருகின்றனர். பெரும்பாலும் ஜெயனே, வீடு வீடாகச் சென்று துணிகளை பெற்றுக்கொண்டு வந்து இஸ்திரி செய்து தருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவர் அந்த