Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நமது எம்ஜிஆர்

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

மன்னார்குடி கும்பலிடம் வருமான வரித்துறை சோதனை ஏன்?; பூனைக்குட்டி வெளியே வந்தது!; நமது எம்ஜிஆர் நாளேடு அம்பலம்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (நவம்பர் 11, 2017) சோதனை நடத்தி வருகிறது. இதற்கு முன், எத்தனையோ முறை இதுபோன்ற சோதனைகளை மன்னார்குடி கும்பல் சந்தித்து இருந்தாலும், இப்போது போன்ற மெகா சோதனையை எதிர்கொண்டதில்லை. முதல் நாளில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டாவது நாளான நேற்று ஊடகங்களைச் சந்திப்பதை தவிர்த்தார். இதற்கிடையே, ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கிடைத்ததாகவும், பாஸ்கரன் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல்கள் எதுவுமே வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களாகச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும், யூகங்கள் அடிப்படையிலும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு
ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிட்டப்பட்டதற்கே தேச விரோத வழக்கு பாயுமெனில், அந்த பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்த எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரும் தேச விரோதிகளா? என நமது எம்ஜிஆர் நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஈடு இணையற்ற தலைவர்களா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை சந்திக்குக் கொண்டு வருவதில் இருதரப்புமே சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் அவர்களின் அரசியல் விமர்சனங்கள் உணர்த்துகிறது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே, அப்படி. சேலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியது தொடர்பாக டிவிடி தினகரன் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்ப