Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: துணைவேந்தர் குழந்தைவேல்.

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.   பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.   அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.   இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்
பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பணி நியமனங்களில் ஊழல், முன்னாள் பதிவாளர் தற்கொலை மர்மம், தணிக்கையில் முறைகேடு என தொடர் சர்ச்சைகளின் வளையத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பெரியார் பல்கலைக்கழகம், இப்போது பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு வழங்கியதிலும் உள்நோக்கம் இருப்பதாக பல்கலை வட்டாரத்தில் புகைய ஆரம்பித்திருக்கிறது.   சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் மணிவண்ணன், 17.8.2018ம் தேதியுடன் பணி நிறைவு பெற்றார். அவருக்கு கடந்த 18ம் தேதி பல்கலை பேராசிரியர்கள் பாராட்டு விழா நடத்தி, வழியனுப்பி வைத்தனர். இதையொட்டி, ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே புதிதாக பதிவாளர் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள தேர்வாணையர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதுவரை முக்கிய பதவியான பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தால் பல்கலையில் நிர்வாகப்பணிகள் பாதிக்கப்பட
ஆசிரியர் நியமன ஊழல் கோப்புகள் மாயமானதா இல்லையா? பெரியார் பல்கலை மழுப்பல்!

ஆசிரியர் நியமன ஊழல் கோப்புகள் மாயமானதா இல்லையா? பெரியார் பல்கலை மழுப்பல்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காத்திரமான புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய கோப்புகள் விவகாரத்தில் மழுப்பலான பதிலைச் சொல்லி செனட் கூட்டத்தை ஒப்பேற்றியுள்ளது பல்கலை நிர்வாகம்.   சேலம் பெரியார் பல்கலையில் கடந்த 20ம் தேதி ஆட்சிப்பேரவைக்குழு எனப்படும் செனட் கூட்டம் நடந்தது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டிய இக்கூட்டம், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடந்து முடிந்துள்ளது. பல்கலை செனட் அரங்கில் காலை 11 மணிக்கு துவங்கிய இக்கூட்டம், மதியம் 1.30 மணிக்கு முடிந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசுக்கல்லூரி, உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட செனட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.   ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடக்கும் கூட்டம் எ