Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தீபாவளி

நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு ஏன்?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவருடைய இல்லத்தில், நடிகர் விஜய் இன்று (அக். 15, 2017) திடீரென்று சந்தித்தார். விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'மெர்சல்' படம், வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு யு / ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. இருப்பினும், விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. எப்படியும் படத்தை தீபாவளியன்று வெளிக்கொண்டு வந்தால்தான் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும். ஒருபுறம், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும், அவ்வாறு வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டமாகவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு, தியேட்டர் அதிபர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெ
‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்திற்கு விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து ஆட்சேபனையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படாததால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது 'மெர்சல்'. ஸ்ரீதேனாண்டால் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி படத்தை தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேஜிக் கலைஞராகவும் முதன்முதலாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வரும் 18ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்
‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டாஸ்மாக் மதுபானங்களின் விலையை, பாட்டிலுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு முன்பே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே மதுவிலக்குக் கொள்கையை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்ற உடனே முதல்கட்டமாக 500 மதுபான கடைகளை மூடி உத்தரவிட்டார். மதுக்கடைகள் திறக்கப்படும் நேரமும் காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டது. படிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று சொல்லப்பட்டாலும் அதைப்பற்றி அதிமுக அரசு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கின்பேரில், நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட