Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: திருமணம்

தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

அரசியல், மதுரை, முக்கிய செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான, தோழர் தா.பாண்டியன் (88) உடல்நலக் குறைவால், வெள்ளிக்கிழமை (பிப். 26) இயற்கை எய்தினார்.   இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். பிப். 24ம் தேதி அவருடைய உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   எனினும், அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிப். 25ம் தேதி மாலையில் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. தீவிர சிகச்சை அளித்தும் பலன் அளிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை (பிப். 26) காலை 10.05 மணியளவில் அவர் உயிரிழந்தார்.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப
ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

அரசியல், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மக்களின் மனம் கவர்ந்த தலைவர்களின் அந்தரங்க தகவல்களைத் தெரிந்து கொள்வதில் வெகுசன மக்களுக்கு என்றுமே ஓர் அலாதி தேடல் இருந்து கொண்டே இருக்கும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்ட நிலையில்கூட இன்றைக்கும் அவரைப்பற்றிய ஆச்சர்யப்படத்தக்க செய்திகள் வெளிந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஜெ.ஜெயலலிதா. எப்போதும் பரபரப்பு அரசியலுக்கு பெயர் பெற்றவர். அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக்குறைவால் மறைந்தார். அரசியலிலும் சினிமாவிலும் எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, ''ஜெயலலிதா: மனமும் மாயையும்'' என்ற பெயரில் மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதி இருக்கிறார். அந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூலாசிரியர் வாஸந்தி, ஜெயலலிதாவைப் பற்றி பல ஆண்டுகளாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த நூலை படைத்திருக்கிறார். அரசியல் மற்றும் வ
கொடிவீரன் – சினிமா விமர்சனம்

கொடிவீரன் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குட்டிப்புலி, கொம்பன், மருது வரிசையில் இயக்குநர் முத்தையாவின் டெம்பிளேட்டில் தடம் மாறாமல் இன்று (டிசம்பர் 8, 2017) வெளியாகி இருக்கிறது கொடிவீரன். குட்டிப்புலி படத்தில் மகனுக்கும் தாய்க்குமான பாசத்தையும், கொம்பன் படத்தில் மாமனாருக்கும் மருமகனுக்குமான பாசத்தையும், மருது படத்தில் பேரனுக்கும், பாட்டிக்குமான பாசத்தையும் சொன்ன முத்தையா, கொடிவீரன் படத்தில் அண்ணன்&தங்கை பாசத்தை பந்தி வைத்திருக்கிறார். ஒரு ஊர். மூன்று வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த அண்ணன்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கை. தங்களது தங்கைகளு க்காக எதையும் செய்யத் துணியும் அண்ணன்கள்; அவர்களுக்காக எதையும் சகித்துக்கொண்டு பாச மழை பொழியும் தங்கைகள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் அன்பு, காதல், துயரம், துரோகம் ஆகியவற்றை ரத்தம் சொட்டச்சொட்ட சொல்கிறது கொடிவீரன். நடிகர்கள்: சசிக்குமார், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பசுபத
திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

அலோபதி, சேலம், பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
இன்றைக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், வலிப்பு நோயால் துடிக்கும் ஒருவருக்கு, சாவிக்கொத்து அல்லது ஏதேனும் இரும்பைக் கையில் திணிக்கும் போக்கே நீடிக்கிறது. ஆனால், வலிப்புக்கும் இரும்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்கிறது மருத்துவ உலகம். அதேநேரம், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். வலிப்பு நோய் எதனால் வருகிறது? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள திரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூளை நரம்பியல் (நியூராலஜிஸ்ட்) துறை மருத்துவர் க.திருவருட்செல்வன் விரிவாக விளக்கம் அளித்தார். அவரிடம் பேசியதில் இருந்து... வலி