Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தாரமங்கலம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இளம்பெண்கள் வாக்கு யாருக்கு?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இளம்பெண்கள் வாக்கு யாருக்கு?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
புதிதாக வாக்களித்த இளம்பெண்கள், நடப்பு அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து வாக்களித்து இருப்பதும், அவர்களிடையேயும் அரசியல் ஆர்வம் அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (பிப். 19) நடந்தது. மாநகர பகுதிகளைக் காட்டிலும், கிராமங்களை உள்ளடக்கிய பேரூராட்சி, நகராட்சிகளில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்திருப்பது தெரிய வந்துள்ளது.   இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கணசாலை, தாரமங்கலம் நகராட்சிகளிலும், மாநகராட்சி பகுதியிலும் முதல்முறை வாக்களித்த இளம் பெண் வாக்காளர்கள் சிலரிடம், எந்தெந்த அம்சங்களை முன்னிறுத்தி வாக்களித்தீர்கள் என கேட்டறிந்தோம். அவர்களிடம் இருந்து எதிர்பாராத சில பதில்களும் கிடைத்தன. தாரமங்கலம் நகராட்சியில் வசிக்கும் கல்லூரி மாணவி உஷா (19), அவருடைய அக்காவும்
சேலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்தது!; பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்!!

சேலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்தது!; பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, துணை மின் நிலையத்தில் உயர்மின்னழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்தது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே, கே.ஆர். தோப்பூரில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இது, 400 மெகாவாட் திறன் கொண்டது. மேட்டூர் அனல்மின் நிலையம், நெய்வேலி ஆகிய இடங்களில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நேரடியாகப் பெற்று, இங்குள்ள டிரான்ஸ்பார்கள் மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் இன்று (ஜூன் 8, 2018) காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியது. தீ, கொளுந்து விட்டு எரிந்தது. கரும்புகை வானுயர பறந்தது. கரும்புகை, பல கிலோமீட்டர் தொலைவில் இருப்போருக்கும் தெரிந்ததால், பலரும்