Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தான செட்டில்மென்ட்

சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

தமிழ்நாடு, மற்றவை, முக்கிய செய்திகள்
நாம் பயணிக்கும் இந்த வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு நாளும் சட்டமும் அதன் பயன்களும் நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் சிலவற்றையாவது நாம் அறிந்து வைத்திருப்பது இன்று காலத்தின் கட்டாயம். இந்த பதிவில் உயில் மற்றும் அதை சார்ந்த சில தகவல்களைப் பார்க்கலாம்.   மரணப்படுக்கையில் இருக்கும் போது எஸ்.வி.ரங்காராவோ அல்லது நாகையாவோ உடனே, “வக்கீல கூப்புடுங்க உயில் எழுதணும்,” என்று இருமிக்கொண்டே சொல்லும் பழைய கருப்பு வெள்ளை சினிமா காலத்திலிருந்தே உயில் என்றால் ஒருவருடைய மரண சாசனம் என்று நாம் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் தவறான அணுகுமுறை. உயில் என்பது ஒருவருடைய வாழ்வின் சாசனம் (Life Testimony). ஒருவரின் வாழ்வில் நடந்த அதிமுக்கியமான நிகழ்வுகளும் அவரின் வாழ்க்கைக்குப்பிறகு அவர் சொல்ல அல்லது சொத்து சம்பந்தமாக செய்ய