Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தர்ம யுத்தம்.

ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மீது உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் தர்ம யுத்தத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என்ற ஊசலாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, ஜானகி அணி என உடைந்த கட்சி, பிறகு ஜெயலலிதா தலைமையில் வீறு கொண்டு எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று அணிகளாக உடைந்து இருக்கிறது. டெல்லி ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. ஆறு மாத காலம் தர்ம யுத்தம் நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்டு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார். துணை முதல்வர் பதவி என்றபோது அவருக்குள் ஒரு சிந்தனை ஓடியிருக்க வேண்டும். ''ஜெயலலிதா 'உள்ளே' சென்றபோதெல்லாம் நாம்தான் நம்பர்-1 ஆக இருந
ஓ.பன்னீர்செல்வத்தை  கதற விடும்  மீம் கிரியேட்டர்கள்!

ஓ.பன்னீர்செல்வத்தை கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பக்கத்தில் 'அம்மா ஆட்சி' என்று ஒரு பதிவுதான் பதிவிட்டார். மீம் கிரியேட்டர்கள் அவரை நொந்து நூடுல்ஸ் ஆக்கி, அழ வைக்கும் அளவுக்கு கேலி, கிண்டல் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர். டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்&ஆப் போன்ற சமூக வலைத்தளங்களே இப்போது சாமானிய மக்களின் நேரடி மேடையாகி விடுகிறது. கையில் ஒரு மொபைல் ஃபோன் இருந்தால்போதும், எதிரில் நிற்பவர் யாரென்றெல்லாம் பார்ப்பதில்லை. உடனுக்குடன் கருத்துகளை வரவேற்றோ, பகடி செய்தோ, அல்லது தர்ம அடியோ கொடுக்கும் விதமாக பதிலடி கொடுத்து விடுகின்றனர். அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பாக இருந்தாலும் சரி. பிரதமர் மோடியோ அல்லது தமிழக முதல்வரோ யாராக இருந்தாலும் இணையவாசிகளுக்கு ஒரே அளவுகோல்தான். அதேநேரம் நல்லதை வரவேற்கவும் தயங்குவதில்லை. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (அக். 14, 2017), '