Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தமிழ் மொழிப்பாடத்தேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்! மாணவர்கள் அதிர்ச்சி!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்! மாணவர்கள் அதிர்ச்சி!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் நாள் நடந்த தமிழ் மொழிப்பாடத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 1, 2019) பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 7082 பள்ளிகளைச் சேர்ந்த 861107 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களோடு சேர்த்து மொத்தம் 887992 பேர் இந்த தேர்வை எழுதுவதாக அரசுத்தேர்வுகள்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.   சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 105476 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 40068 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.   பிளஸ்-2 பொதுத்தேர்வு இதுவரை 6 பாடங்களுக்கும் சேர்த்து 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண்