Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: டாஸ்மாக்

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மதுரை செரீனா மீது கஞ்சா வழக்கு, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் மீது போதைப்பொருள் வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு நிகழ்வுகளின் பின்னணியில் சசிகலா மட்டுமே இருப்பது போலவும், ஜெயலலிதாவுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலவும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா' செய்தி வெளியிட்டுள்ளது, மன்னார்குடி கும்பல் வட்டாரத்தை கொதிப்படையச் செய்துள்ளது. கடந்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, ஆளும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது புரட்சித்தலைவி அம்மா' தொடங்கப்பட்டது. நேற்று வெளியான (மார்ச் 2, 2018) இந்த நாளிதழில், ''இதுவே என் கட்டளை.... கட்டளையே என் சாசனம்'' என்ற தலைப்பில் மிக நீளமான கவிதை ஒன்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சித்ரகுப்தன் என்ற புனைப்பெயரில் அந்தக் கவிதை எழுத்தப்பட்டு இருந்தது. அந்த கவிதை இடம்பெற்ற பக்கத்தின் மேல் பகுத
‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டாஸ்மாக் மதுபானங்களின் விலையை, பாட்டிலுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு முன்பே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே மதுவிலக்குக் கொள்கையை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்ற உடனே முதல்கட்டமாக 500 மதுபான கடைகளை மூடி உத்தரவிட்டார். மதுக்கடைகள் திறக்கப்படும் நேரமும் காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டது. படிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று சொல்லப்பட்டாலும் அதைப்பற்றி அதிமுக அரசு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கின்பேரில், நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட