Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சென்டம்

பிளஸ்2 கணித தேர்வு எளிமை;  ஆனால் சென்டம் குறையும்!

பிளஸ்2 கணித தேர்வு எளிமை; ஆனால் சென்டம் குறையும்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இன்று நடந்த பிளஸ்2 கணித பொதுத்தேர்வில் பழைய வினாத்தாளில் இருந்து ஏராளமான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், இந்த தேர்வில் வெகுவாக சென்டம் பெறுவது குறையும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி பிளஸ்2 தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று (மார்ச் 12, 2018) கணித பாடத்தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் கடினமும் அல்ல; அதேநேரத்தில் மிக எளிமை என்றும் சொல்ல முடியாது என்று கலவையான கருத்துகளை கணித ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மூத்த கணித ஆசிரியர் ஒருவர் கூறியது: பத்து மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. 6 மதிப்பெண் பிரிவில் கடைசியாக ஒரு வினா க