Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சுயமரியாதை

நீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா? நோமோபோபியா குறைபாடு வரலாம்…!!

நீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா? நோமோபோபியா குறைபாடு வரலாம்…!!

சிறப்பு கட்டுரைகள், மருத்துவம், முக்கிய செய்திகள்
எது உங்களை இன்று வசியப்படுத்தி வைத்திருக்கிறதோ, அதுவே உங்களை வீழ்த்தும் ஆயுதமாகவும் மாறலாம். அதில் உங்களிடம் உள்ள கைபேசிகளும் (மொபைல் போன்) விதிவிலக்கு அல்ல. நான், உங்களை அச்சமூட்டுவதற்காக இப்படி சொல்லவில்லை. ஆனால், உலகளவில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப அடிமைகளைப் பற்றியே சொல்ல விழைகிறேன்.   தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் கைபேசிகளின் வழியே, உலகத்தை உங்களின் உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டது. ஆனால், அதுவே உங்களை சக மனிதர்களிடம் இருந்து பல மைல் தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்றுவிட்டதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தூண்டப்படும் விளம்பரங்கள், பெருகி வரும் நுகர்வு கலாச்சாரம், பணப்புழக்கம் ஆகியவற்றால் ஒவ்வொருவர் வீட்டிலும் இன்றைக்கு குறைந்தபட்சம் நான்கு  மொபைல் ஸ்மார்ட் போன்களாவது இருக்கின்றன. இதன் விளைவு, குடும்ப உறுப்பினர்களேகூட வாட்ஸ்அப் வழியே உரையாடிக் கொள்ளும் அவல
கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் தொடாத எல்லைகளே இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என இறுதி மூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்தவர். சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் சொல்ல வந்த சேதியை சமயோசிதமாக நகைச்சுவையுடன் சொல்லி, எல்லோரின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு கலைஞருக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் தளத்தில் அவரை எதிர்ப்போர் கூட அவரின் நகைச்சுவையை விரும்பி ரசிப்பார்கள். கவிஞர் தெய்வச்சிலை, 'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கலைஞர் நகைச்சுவையாக சொன்ன 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். 'நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்' இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில் இருந்து....   * கடவுள் இருக்கிறாரா? இல்லையா?   கடந்த 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் ஒ