Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சந்தீப் கந்தூரி

நெல்லை சம்பவம்: கந்துவட்டியால் தீக்குளித்த நான்காவது நபரும் பலி; குடும்பமே மடிந்தது

நெல்லை சம்பவம்: கந்துவட்டியால் தீக்குளித்த நான்காவது நபரும் பலி; குடும்பமே மடிந்தது

தமிழ்நாடு, திருநெல்வேலி, திருப்பூர், முக்கிய செய்திகள்
  கந்துவட்டி கொடுமையால் கடந்த 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவத்தில் எஞ்சியிருந்த நான்காவது நபரும் இன்று (அக். 25, 2017) பலியானார். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார். அசல், வட்டி திருப்பிச் செலுத்தியும், தொடர்ந்து பணம் கேட்டு கடன்காரர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. விரக்தி அடைந்த இசக்கிமுத்து, தன் மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23ம் தேதியன்று காலை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் அவரை அருகில் இருந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் ஊடகத்தினர் பத்திரமாக மீட்டு பாளையம்கோட்டை அரசு மருத்துவமனைய
நெல்லை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்; கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிப்பு; தொடரும் துயரம்

நெல்லை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்; கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிப்பு; தொடரும் துயரம்

சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை, கந்துவட்டி கொடுமையால் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு 4 வயதில் மதிசரண்யா என்ற மகளும், 2 வயதில் அக்ஷய சரண்யா என்ற பெண் கைக்குழந்தையும் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர். தீ