Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கோஹ்லி

கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று (அக். 22, 2017) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிய அளவில் ரன்களை குவிக்கத் தவறினர். இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோஹ்லி அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து, தினேஷ்கார்த்திக் 37 ரன்கள் எடுத்ததுதான் இந்திய அணி வீரர்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட
5வது ஒருநாள் கிரிக்கெட்: ரோஹித் ஷர்மா  சதம்;  இந்தியா வெற்றி

5வது ஒருநாள் கிரிக்கெட்: ரோஹித் ஷர்மா சதம்; இந்தியா வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடந்து முடிந்த முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வென்று, தொடரை கைப்பற்றி இருந்தது. நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நேற்று (அக். 1) நடந்தது. ஆஸ்திரேலியா அணியில் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு, பால்க்னர் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்திய அணியில் ஷமி, உமேஷ் யாதவ், சாகல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, பும்ரா, புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு இர