Monday, April 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கொரோனா

சேலத்தில் நாளை முதல் புதிய நேரக்கட்டுப்பாடு அமல்; தேநீர் கடைகள் மூடல்! ஆட்சியர் ராமன் அறிவிப்பு!!

சேலத்தில் நாளை முதல் புதிய நேரக்கட்டுப்பாடு அமல்; தேநீர் கடைகள் மூடல்! ஆட்சியர் ராமன் அறிவிப்பு!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததால், அனைத்து வகையான கடைகளும் நாளை முதல் (ஜூன் 24) மாலை 4 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ராமன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதியின்றி வருகை தந்தவர்கள், தகவல் தெரிவிக்காமலும், எவ்வித பரிசோதனைகளும் செய்து கொள்ளாமல் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   சேலம் மாவட்டத்தில் 35 பேர் மட்டுமே ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 185 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெளி
ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

தமிழ்நாடு
கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று முதல் (மே 11) சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் உள்பட பல்வேறு தனிநபர் கடைகளுக்கும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் பின்வரும் கடைகளை இன்றுமுதல் (மே 11) குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதன் விவரம்:   1. தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) 2. பேக்கரி கடைகள் (பார்சல் மட்டும்) 3. உணவகங்கள் (பார்சல் மட்டும்) 4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் 5. கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள் 6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள் 7. மின்சாதனப் பொருள்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் 8. மொபைல்
20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

சிறப்பு கட்டுரைகள், நாமக்கல், முக்கிய செய்திகள்
வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்களும், சவால்களும்தான் உலகுக்கு நிஜ நாயகர்களை அடையாளம் காட்டுகின்றன. அப்படி, ஒரு காலத்தில் பண்ணை அடிமையாக இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய கிராம மக்களுக்கு தேடித்தேடிச் சென்று 20 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகளை இலவசமாக வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.   நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (49). மனைவி தமிழ்ச்செல்வி. மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 1வது ரிசர்வ் வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி. அதற்கு முன்பு, அவினாசிப்பட்டி
கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் மாநகர பகுதிகளில் மட்டும் இன்று (ஏப். 26) முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் விளக்கமாக வெளியிட்டுள்ளது.   ஆரம்பத்தில் சளி, இருமல், தொண்டையில் வலி, மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளாக இருந்து வந்த நிலையில், அண்மைய முடிவுகளில் இந்த அறிகுறிகள் இல்லாதோருக்கும் நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறி வருகிறதோ என்ற மருத்துவத்துறையினரின் அய்யம் காரணமாகவே, ஊரடங்கை மேலும் கடுமையாக்கி பரவலாக முழு ஊரடங்காக அமல்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏப். 25, 26 ஆகிய இரு நாள்கள் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு