Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கைத்தறி நெசவாளர்கள்

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சேலம், தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது. கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், இடையர்பாளையம், ராம் நகர் மற்றும் ஊத்துக்குளி, ஸ்ரீவில்லிப்புத்தூர், சுப்ளாபுரம், செங்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி உள்பட 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர், தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 500 பேர் வேலை செய்து வருகின்றனர். தலைமையிடம் மற்றும் கிளைகளில் 1000 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதா
சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

குற்றம், கோயம்பத்தூர், சென்னை, தூத்துக்குடி, தேனி, முக்கிய செய்திகள், வேலூர்
தமிழகத்தில், சர்வோதய சங்கங்களில் கைத்தறி நெசவாளர்கள் பெயரில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, போனஸ் தொகையை காலங்காலமாக ஒரு கும்பல் கூட்டு சேர்ந்து சுரண்டி வந்துள்ளன.   மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 70 சர்வோதய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த துறை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கையால் நூற்ற நூலை, கையாலும் காலாலும் நெய்யப்படும் துணிதான் கதர். அப்படியான கதர் துணி நெசவாளர்கள் மற்றும் கிராம கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்த சர்வோதய சங்கங்கள் தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள சங்கங்களில் நாலைந்து தவிர ஏனைய சர்வோதய சங்கங்கள் கதர் து
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.   சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில், 1956ம் ஆண்டு முதல் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.   இக்கூட்டுறவு சங்கத்தில் 1558 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை சங்கம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.   இதற்காக சங்க உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு ஒரு பாவு, அதற்குரிய கோரா பட்டு நூல் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு பாவு மூலம் பத்து வெண்பட்டு வேஷ்டிகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு வேஷ்டியின் கொள்முதல் விலை 750 ரூபாய்.   ஒரு கு