Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கூகுள்

தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இணைய உலகில் மிகப்பெரும் தேடியந்திரமாக உள்ள கூகுள், தனது ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக இதுவரை 42 மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து இருந்தது. ஆட்சென்ஸ் அங்கீகாரம் பெற்ற மொழிகளில் வெளிவரும் இணையதளங்களுக்கு மட்டுமே கூகுள் நிறுவனம் விளம்பரங்கள் வழங்கி வந்தது. அதேநேரம், உலகளவில் 10 கோடி பேருக்கும் மேலான மக்களால் பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு இதுவரை கூகுள் ஆட்சென்ஸ் அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 9, 2018ம் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்மூலமாக தமிழுக்கு புதிய பொருளாதார கதவுகள் திறந்துள்ளதாகக் கூறலாம். இனி உலகின் பல மூலைகளிலும் உள்ள தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே ஆட்சென்ஸின் அங்கீகாரம் பார்க்கப்படுகிற
வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31உடன் முடிவுக்கு வருகிறது!; எந்தெந்த போன்களில் தெரியுமா?

வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31உடன் முடிவுக்கு வருகிறது!; எந்தெந்த போன்களில் தெரியுமா?

இந்தியா, உலகம், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற ஊடகமாக வாட்ஸ்ஆப் செயலியின் சேவை உருப்பெற்று உள்ளது. நாள்தோறும் இதன் சேவையை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். மாதந்தோறும் சராசரியாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.3 பில்லியனாக அதிகரித்துள்ளது. நாள்தோறும் 55 பில்லியன் செய்திகள், இதன்மூலமாக பகிரப்படுகிறது. ஒரு பில்லியன் படங்களும் தினமும் பகிரப்பட்டு வருகின்றன. வாட்ஸ்ஆப் செயலி பயன்பாட்டுக்கு வந்த புதிதில் சந்தையில் விற்கப்பட்ட 75 சதவீத மொபைல் போன்களின் இயங்குதளங்கள் பிளாக்பெர்ரி, நோக்கியா நிறுவனத்தினுடையதாக இருந்தது. இயங்குதளங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்போதுள்ள மொபைல் போன்களில் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளங்களே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அதற்கேற்றாற்போல் வாட்ஸ்ஆப் செயலியின் இயங்குதளமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ள