Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கியூஆர் கோடு புத்தகம்

கையடக்க கணினி… ‘கியூஆர் கோடு’ புத்தகம்!;  நவீனமாகிறது அரசுப்பள்ளிகள்!!

கையடக்க கணினி… ‘கியூஆர் கோடு’ புத்தகம்!; நவீனமாகிறது அரசுப்பள்ளிகள்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-க்- க-ட்-டு-ரை- அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கல்வி வந்த பிறகுதான் கணினியை தொட்டுப் பயன்படுத்தவே முடியும் என்றிருந்தது ஒரு காலம்; இன்றைக்கு, அரசுப்பள்ளியில் பயிலும் 5 வயது குழந்தைகூட கையடக்கக் கணினியில் (டேப்லெட்) பாடம் கற்கும் உன்னத நிலையை நிதர்சனமாக்கியிருக்கிறது அனைவருக்கும் கல்வித்திட்டம். அரசுத் தொடக்கப்பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் செயல்வழிக்கற்றலின் அடுத்தக்கட்ட நகர்வாகவே இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டை நான் கருதுகிறேன். அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மாவட்டத் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளரான தேவிகா, குழந்தைகள் கற்றல், கற்பித்தல் முறைகளில் இயல்பாகவே ஆர்வம் காட்டுபவர். புதிதாக குழந்தைநேய கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகச் சொன்னவர், அதுகுறித்து ஆசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் சொன்னார். மா