Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கவிதை நூல் விமர்சனம்

தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

இலக்கியம், புத்தகம், முக்கிய செய்திகள்
பூ-வ-ன-ம்   'தொல்காப்பியப் பெயர்த்தி' என்ற பெயரில் விரைவில் கவிதை நூல் வெளியிட இருப்பதாக இந்நூலாசிரியர் மழயிசை ஒருநாள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அப்போதுமுதல், அவரைவிடவும் இந்த நூலுக்காக பேரார்வத்துடன் காத்திருந்தேன். எனக்குத் தொல்காப்பியம் பிடிக்கும் என்பது மாத்திரமல்ல; வேறு இரண்டு காரணங்களும் இருந்தன. ஒன்று, தொல்காப்பியரின் பெயர்த்தி என்று சொல்லிக்கொள்ளும் அசாத்திய துணிச்சலும் ஒருவருக்கு இருக்கிறதா? என்ற வியப்பு; அடுத்து, மழயிசை என்ற நூலாசிரியரின் புனைப்பெயர். இரண்டு தனித்துவ அடையாளங்களும் எதிர்பார்ப்பை உண்டாக்கின. நூலின் தலைப்பிற்கேற்றவாறு தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, நவீனத்தையும் இணைத்து நிகழ்கால சமூக அவலங்களை சாடியிருக்கிறார் மழயிசை. எல்லா புதுமுக படைப்பாளிகளும் பேசுகிற பாடுபொருள்களைத்தான் இந்நூலாசிரியரும் பேசுகிறார் என்
பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், சேலம், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   சேலம் மோகன் நகரைச் சேர்ந்த தோழர் சுகபாலாவின் இரண்டாவது படைப்பு, 'பச்சையப்பாத்திரம்'. அள்ள அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம் பற்றியே முழுமையாக அறிந்திடாத நம்மவர்க்கு, பச்சையப்பாத்திரம் சொல்லை உருவாக்கி தமிழ்மொழிக்கு கொடையளித்திருக்கிறார். இந்தச் சொல்லை உருவாக்கியதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்த நூலின் பாடுபொருள் மரம்தான். அதனூடாக காதல், மனிதர்களின் மனப்பிறழ்வு, உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல், மானுட குலத்திற்கே உரிய முரண்கள் என பல கிளைகளாக கவிதைகள் விரிகின்றன. தோழரே மரமாகிறார். சிறு புல்லாகிறார். குழந்தையாகிறார். அவரே, புத்தனாகவும் மாற முயற்சிக்கிறார். வண்ணத்துப்பூச்சியை பிடித்து, பறக்கவிட்ட பிறகும் அதன் வண்ணங்கள் நம் விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்குமே அப்படித்தான், பச்சையப்பாத்திரம் நூலை வாசித்த பின்னரும் அதன் தாக்கம் மனதினுள் அப்பிக்கொண்டு வி