Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கண்ணதாசன்

35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

இந்தியா, முக்கிய செய்திகள்
  'பிணியும் மூப்பும் இறப்பும் மானுடர்க்கே அன்றி காதலுக்கு ஒருபோதும் அல்ல' என்பதை, 65 வயதிலும் தான் நேசித்த பெண்ணுக்காய் காதலை பசுமையுடன் பத்திரப்படுத்தி வந்திருக்கும் சிக்கண்ணா நிரூபித்திருக்கிறார்.   'காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை; மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்ந்ததில்லை' என்ற கண்ணதாசனின் வரிகள், சிக்கண்ணா - ஜெயம்மாவுக்கு ரொம்பவே பொருந்தும்.   கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் வசிக்கும் சிக்கண்ணாதான், கடந்த ஒரு வாரமாக இணையங்களில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர். இத்தனைக்கும் இவர் இப்போதும் மிகச்சாமானியர்தான்.   கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு கூலி வேலைக்காகச் சென்றிருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரில் வசித்து வந்த அவருடைய உறவுக்கார பெண்ணான ஜெயம்மாவுக்கும் (60) பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில்
ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் சற்று ஈர்ப்பு அதிகம். தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்டு விய
முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
நளன் - தமயந்தி இணையரின் காதல் வாழ்வு பற்றிய பாடல் தொகுப்புதான் நளவெண்பா. என்றாலும், தேனினும் இனிய உவமைகளும், உவமேயங்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பு நளவெண்பாவுக்கு உண்டு. புகழேந்தி புலவரின் கற்பனையின் ஆழத்தை ஒவ்வொரு பாடலிலும் உணர்ந்து கொள்ள முடியும். நளவெண்பாவின் கலித்தொடர் காண்டத்தில் கானகத்தில் இயல்பாய் நிகழ்ந்த காட்சியொன்றை தன் கற்பனைத் திறத்தால் சாகாவரம் பெற்ற பாடலாக்கி இருக்கிறான் புகழேந்தி புலவன். அந்தப் பாடல்...   ''மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தை பங்கயம் என்றெண்ணிப் படிவண்டை - செங்கையால் காத்தாளக் கைம்மலரை காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தாளைக் காணென்றான் வேந்து'' (184)   என்கிறான் புகழேந்தி புலவன்.   கானகத்தில் அழகான, ஒளி வீசக்கூடிய முகம்கொண்ட பெண்ணொருவள், மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது
திரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்…

திரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்…

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள்
#தொடர்   இளங்கம்பன் கண்ணதாசன் பாடல்களில் கற்பனைத்திறம் மிகுந்திருப்பது காதல் பாடல்களிலா? தத்துவப் பாடல்களிலா? என ஆராய்ச்சியே மேற்கொள்ளலாம். அந்தளவுக்கு ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. காதல் இன்பத்தை மட்டுமல்ல; அதன் தோல்வியால் உண்டாகும் வலியையும் பார்வையாளனுக்கு மிக எளிதாகக் கடத்திவிடும் திறம், கண்ணதாசனின் வரிகளுக்கு உண்டு. காதலின் உச்சநிலையை, வேதனைகளை, செவிகளாலும் உணர முடியும். அதுதான் கவியரசரின் வெற்றி.   காதல் உணர்வு இருபாலருக்கும் பொதுவானதுதான். எனினும், பெண்களே காதலால் பெரும் அல்லல் படுகின்றனர் என்பது வள்ளுவப் பெருந்தகையின் கூற்று. நிகழ்கால சாட்சிகளும் அதுதானே. காதலுற்ற ஒரு பெண், காதலனுக்கு ஓயாமல் அலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருப்பதை இப்போதும் நாம் காண்கிறோமே. (அந்த அலைபேசிக்கு 'ரீசார்ஜ்' செய்வது என்னவோ காதலன்தானே!). பகல் நேரங்களில் காதலனை பூங்கா, கடற்கரை, தி